உயர்வுடன் தொடங்கி... சில நிமிடங்களில் சரிந்த பங்குச் சந்தை!
டைட்டன், எய்ச்சர், பாரத் எலக்ட்ரானிக்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தில் வணிகத்தைத் தொடங்கின.
இந்திய பங்குச் சந்தை வணிகம் வாரத்தின் மூன்றாவது வணிக நாளான இன்று (பிப். 11) உயர்வுடன் தொடங்கியது.
சென்செக்ஸ் 62 புள்ளிகள் உயர்வுடனும் நிஃப்டி 26,000 புள்ளிகளுக்கு அருகிலும் வணிகம் தொடங்கியது.
எய்ச்சர், பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தில் வணிகத்தைத் தொடங்கின. எனினும் சில நிமிடங்களில் சென்செக்ஸ், நிஃப்டி சரியத் தொடங்கின.
Advertisement
Advertisement
வணிகத்தின் தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 62 புள்ளிகள் உயர்ந்து 84,339 புள்ளிகளாக வணிகம் தொடங்கியது. எனினும் சில நிமிடங்களில் (10 மணி நிலவரப்படி) 84,282 புள்ளிகள் வரை சரிந்து வணிகமாகி வருகிறது.
இதேபோன்று தேசிய பங்குச் சந்தை வணிகம் நிஃப்டி 25,998 புள்ளிகளாக வணிகம் தொடங்கியது. பின்னர் சில நிமிடங்களில் 24 புள்ளிகள் சரிந்து 25,959 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 12 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வணிகமாகி வருகின்றன.
காலை 10 மணி நிலவரப்படி அதிகபட்சமாக எம் & எம் நிறுவனப் பங்குகள் 2.39% உயர்ந்து வணிகமாகி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மாருதி சுசூகி 1.47%, டைட்டன் கம்பெனி 1.47%, எஸ்பிஐ 0.55%, இன்டர்குளோம் 0.49%, ரிலையன்ஸ் 0.31%, பஜான் ஃபின்சர்வ் 0.18% உயர்ந்திருந்தன.
இதேபோன்று இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், பவர் கிரிட், எடர்னல், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் வணிகமாகி வருகின்றன.
நிஃப்டி பட்டியலில் எய்ச்சர் மோட்டார்ஸ், பிலிப்ஸ் கார்பன், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், பிரிட்டானியா, கேஜே டயர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
Stock market Opening Bell Sensex gains 65 points, Nifty near 26,000
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.