இந்தியா

25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுவிப்பு: மத்திய நிதியமைச்சர்!

DIN

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களின் வறுமை நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்ச்ர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். அவர் தெரிவித்ததாவது:

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்துள்ளப்பட்டுள்ளது. 11.8 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசின் மானியம் நேரடியாக செலுத்தப்படுகிறது.

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும். அடுத்த  5 ஆண்டிகள் என்பது வளர்ச்சிக்கானது. வீட்டின் மொட்டை மாடியில் சூரிய மின்தகடு(சோலார்) அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

2014-ல் மோடி பிரதமராக பதவியேற்கும் போது பொருளாதாரத்தில் இந்தியா பின் தங்கியிருந்தது.  கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களில் ஸ்டிக்கர்: மருத்துவர்களுக்கு அனுமதி தர மறுப்பு!

தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை: முதல்வர் ரேவந்த் ரெட்டி

இந்தியன் - 28!

சவுக்கடியுடன் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறும் ஈரானிய இயக்குநர்!

டி20 போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT