மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தார். மக்களவையில் இன்னும் சற்று நேரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தரப்படும்.
Advertisement
Advertisement
சில மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வருமான வரி செலுத்துவோருக்கு சலுகைகள், வரிக் குறைப்பு உள்பட மக்களைக் கவரும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. மத்திய இடைக்கால பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றவுள்ளாா்.
தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதன்படி, ஜூலையில் முழு பட்ஜெட் தாக்கலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.