இந்தியா

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது: நிா்மலா சீதாராமன்

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது என்றும் நாட்டில் பால் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

DIN

புது தில்லி: உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது என்றும் நாட்டில் பால் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை அறிவித்தார்.

17-ஆவது நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடரின் பட்ஜெட் கூட்டத்தொடரும், நாடப்பாண்டின் முதல் கூட்டம் குடியரசுத் தலைவா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது.

2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப். 1)காலை 11 மணியளவில் தாக்கல் செய்து, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். 

அப்போது, உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது, ஆனால் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது என்று நிதியமைச்சர் கூறினார்.

இந்தியாவின் பால் உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்து 230 ஆக உள்ளது. 

2022-23 இல் 58 மில்லியன் டன்களாக இருந்தது. பால், பால் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

எண்ணெய் வித்துக்கள் உற்பத்திக்காக ஆத்மா நிர்பர்தாவுக்கான உத்தி உருவாக்கப்படும்.

விவசாயத் துறையில் மதிப்புக் கூட்டல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT