முகப்பு
இந்தியா

ரயில்வேக்கு ரூ.2.40 லட்சம் கோடி:இதுவரை இல்லாத அதிகபட்சம்

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:39 PM
பகிர்:

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டு ரயில்வே துறைக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘2013-14-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் நிகழாண்டு பட்ஜெட்டில் 9 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி, உரங்கள், உணவுப் பொருள்களைக் கொண்டு செல்லும் 100 போக்குவரத்து உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.15,000 கோடி தனியாரின் பங்களிப்பாகும்.

2023-24-இல் ரயில்வே துறையின் நகர வருவாய் செலவினம் ரூ.2.65 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 2,42,892.77 கோடியாக இருந்தது.

ரயில் நிலையங்களை மெட்ரோ நிலையங்களுடன் இணைக்கும் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேஜஸ், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, ஹம்சஃபா் ஆகிய ரயில்களின் 1000 பெட்டிகளின் உள்புறம் நவீனமயமாக்கப்படும்.

அதிவேக வந்தே பாரத் ரயில்களுக்கு ஏற்ற வகையில், தண்டவாளங்களை சீரமைக்க ரூ.17,296.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.15,388.05 கோடியாக இருந்தது என்று குறிப்பிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →