பிஎம் கிஸான்: 11.8 கோடிவிவசாயிகளுக்கு நிதியுதவி
பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை (பிஎம் கிஸான்) திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 11.8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக
பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை (பிஎம் கிஸான்) திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 11.8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
மக்களவையில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில் அவா் இதைத் தெரிவித்தாா்.
உலகின் மாபெரும் நேரடி பலன் பரிமாற்றத் திட்டங்களில் ஒன்றான ‘பிஎம் கிஸான்’ திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு தலா ரூ.6,000 நிதியுதவி மூன்று தவணைகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது.
நேரடி பலன் பரிமாற்றத்தின்கீழ், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இத்தொகை செலுத்தப்படுகிறது. கடந்த 2019 இடைக்கால பட்ஜெட்டின்போது இத்திட்டம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.