இந்தியா

மீண்டும் எங்களை ஆட்சியில் அமர்த்துவார்கள்: நிர்மலா சீதாராமன்

மீண்டும் பாஜவை ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

DIN

மீண்டும் எங்களை ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். அவர் தெரிவித்ததாவது:

மக்கள் எங்களுக்கு வலுவான பெரும்பான்மை அளிப்பார்கள். எங்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

2014-ல் மோடி பிரதமராக பதவியேற்கும் போது பொருளாதாரத்தில் இந்தியா பின் தங்கியிருந்தது.  கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது.

சமூக நீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இந்தியாவின் பொருளாதாரத்தை மோடி அரசு வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

பொறியாளர்கள் பணிக்கான தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

பழந்தமிழரின் காலநிலை அறிவு!

தமிழிலக்கியங்களில் வரிவிதிப்பு!

எலைட்! க்யூட்!! ப்ரெட்டி... ப்ரீத்தி!

SCROLL FOR NEXT