ஹிமாசலில் கடும் பனிப்பொழிவு: 504 சாலைகள் மூடல் 
இந்தியா

ஹிமாசலில் கடும் பனிப்பொழிவு: 504 சாலைகள் மூடல்!

ஹிமாசலில் கடும் பனிப்பொழிவு காரணமாக 504 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

DIN

ஹிமாசலில் கடும் பனிப்பொழிவு காரணமாக 504 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. மாநிலத்தில் 4 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட மொத்தம் 504 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 

சிம்லாவில் 161 சாலைகள், லாஹவுஸ்-ஸ்பிடியில் 153, குலுவில் 76, மண்டியில் 44, சம்பாவில் 62 கின்னூரில் 7 மற்றும் காங்க்ராவில் ஒரு சாலையும் ஆகும். 

674 மின்சார விநியோகத் திட்டங்கள் தடைப்பட்டுள்ளதாகவும், 44 நீர் விநியோகத் திட்டங்கள் தடைப்பட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. 

1 முதல் 5 அடி வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ள நிலையில், சாலைகளில் மக்கள் பயணிப்பது சிரமமாகியுள்ளது. புத்தாண்டுக்குப் பிறகு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஹிமாசலில் குவிந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

SCROLL FOR NEXT