மம்தா பானர்ஜி | PTI 
இந்தியா

போராட்ட களத்திலேயே இரவு தங்கிய முதல்வர்!

மத்திய அரசு மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை கோரி நடத்தப்பட்ட போராட்டம் இரவு முழுவதும்  தொடர்ந்தது.

DIN

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் நிலுவை தொகை கோரி நடத்திவரும் போராட்டம், கடும் குளிருக்கு மத்தியில் இரவிலும் தொடர்ந்தது. 

கொல்கத்தாவின் முக்கிய பகுதியான மெய்டானில் அம்பேத்கார் சிலை முன்பு மம்தா உள்ளிட்ட திரிணமூல் தலைவர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்கள். 

மாநில அமைச்சர்கள் ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் அரூப் பிஸ்வாஸ் பானர்ஜி உடன் இரவு போராட்டத்தில் இருந்ததாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசு, மேற்கு வங்கத்துக்கு பல்வேறு வகையில் தர வேண்டிய நிலுவை தொகை விடுவிக்கப்படாததால் இந்த போராட்டத்தை திரிணமூல் அரசு கையில் எடுத்துள்ளது.

திங்கள்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்வரை 48 மணி நேரம் இந்த போராட்டம் நீடிக்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT