இந்தியா

”மோடி ஒரு எழுச்சியூட்டும் தலைவர்” - ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் பாராட்டு

DIN

ஜெய்ப்பூர் : ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் டர்ன்புல் பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டி புகழ்ந்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா உறவு குறித்து மதிப்பிட்டுள்ள அவர், இருநாட்டு உறவுக்கும் பத்துக்கு பத்து மதிப்பெண் வழங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் பங்கேற்பதற்காக தனது மனைவியுடன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள அவர் கூறியதாவது, 

கிரிக்கெட் மீதான காதல், ஜனநாயகம் மற்றும் சட்டம் ஒழுங்கு  போன்ற பல்வேறு விஷயங்களில் இருநாடுகளுக்கும் இடையே ஒற்றுமை இருக்கின்றன.

எனினும், இருநாடுகளும் போதுமான அளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. 
ஒரு வெளிநாட்டு முதலீட்டாளராக, இந்தியாவில் வணிகம் செய்வது மிகவும் கடினம்.இதை பிர்தமர் மோடியும் ஏற்றுக்கொண்டுள்ளார். கம்யூனிசத்தை கடைபிடிக்கும் சீனாவில் முதலீடுகளை செய்வது, ஜனநாயக தேசமான இந்தியாவில் இருப்பதை விட எளிதான விஷயமாக உள்ளது என்பது சற்று வேடிக்கையான விஷயம்.

எனினும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலம் இருநாட்டு வர்த்தக உறவுகள் மேம்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் நட்பை மிகுந்த சந்தோஷத்துடன் அனுபவிப்பதாகவும், இந்தியாவில் பிரதமர் மோடி மீது சர்ச்சைகள் இருந்தாலும் வெளியில் இருந்து பார்க்கும்போது,  மோடி ஒரு எழுச்சியூட்டும் தலைவர் என்றும் அவர் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்தியாவிற்கு முதன்முறையாக கடந்த 2017-ஆம் ஆண்டு வருகை தந்திருந்த அவர், பிரதமர் மோடியுடன் தொடர்ந்து நெருக்கமான உறவை கடைபிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT