இந்தியா

மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர்!

மத்தியப் பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்து நிதானமின்றி படிக்கட்டில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

மத்தியப் பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்து நிதானமின்றி படியில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளி மாணவர்கள் எடுத்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்து, ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபால்பூர் பகுதியில் ஜமுனியா அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். 

அதிகமாக குடித்ததால் நிதானமிழந்து பள்ளியின் படியில் விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பள்ளி மாணவர்கள் விடியோ எடுத்துள்ளனர். இந்த விடியோ குறித்து அறிந்த பள்ளிக்கல்வித் துறை, ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 

ஆசிரியர் குடித்துவிட்டு பள்ளிக்கு வருவது இது முதல்முறை இல்லை என்றும், அடிக்கடி இவ்வாறு நடைபெறுவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து நல்வழிப்படுத்தும் ஆசிரியர் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

SCROLL FOR NEXT