காஷ்மீரில் பாட்னிடாப் பகுதியில் வாகனங்களை மூடியுள்ள பனி 
இந்தியா

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: விமான சேவைகள் பாதிப்பு

காஷ்மீரில் தொடர் பனிப்பொழிவின் காரணமாக ஸ்ரீநகர் செல்லும்  அனைத்து விமானங்களும் இன்று(பிப்.4) ரத்து செய்யப்பட்டுள்ளன.

DIN


ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாள்களாக கடும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இந்நிலையில், தொடர் பனிப்பொழிவின் காரணமாக அங்கு விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

நேற்று (பிப்.3) நள்ளிரவு முதல் தொடர்ந்து பனிப்பொழிவு நீடித்து வரும் நிலையில், விமான ஓடுபாதைகளில் பனி படர்ந்துள்ளது. இதனையடுத்து ஸ்ரீநகர் மற்றும் லே விமான நிலைய ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மோசமான வானிலையால் அனைத்து விமானங்களும் இன்று(பிப்.4) ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.    

இதனைத்தொடர்ந்து, மும்பையிலிருந்து ஸ்ரீநகர் செல்லும் 4 விமானங்களும், லே செல்லும் 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பனிப்பொழிவால் சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வாகன ஓட்டிகள் கவனமாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!

காலமானார் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்!

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

ஆளுநரின் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!

பாலஸ்தீனம் புதைக்கப்படுகிறது... மேற்கு கரையில் 3,400 வீடுகள் கட்ட அனுமதி: இஸ்ரேல் அமைச்சர்!

SCROLL FOR NEXT