சர்வதேச சிறு தேயிலை உரிமையாளர் கூட்டமைப்பின் தலைமையிடம் இந்தியாவுக்கு மாற்றம்!
சர்வதேச சிறு தேயிலை உரிமையாளர் கூட்டமைப்பின் தலைமையிடம், சீனாவில் இருந்துவந்த நிலையில், அதன் தலைமையிடம் இந்தியாவுக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவஹாத்தி : சர்வதேச சிறு தேயிலை உரிமையாளர் கூட்டமைப்பின்(சிஐடிஎஸ்) தலைமையிடத்தை இந்தியாவுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.சர்வதேச சிறு தேயிலை உரிமையாளர் கூட்டமைப்பின் தலைமையிடம், சீனாவில் இருந்துவந்த நிலையில், தற்போது அதன் தலைமையிடம் இந்தியாவுக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. அவையின் கீழ் இயங்கும் ’உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்(எஃப்ஏஓ) தேயிலைக்கான சர்வதேச அரசுகளின் குழுவின் 25-வது அமர்வு அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியில் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், அப்போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. அவையின் கீழ் இயங்கும் ’உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்(எஃப்ஏஓ) தேயிலைக்கான சர்வதேச அரசுகளின் குழுவின்’ தலைமைப் பொறுப்பிலிருந்த பிரிட்டனிடமிருந்து, அதன் தலைமைப் பொறுப்பை இந்தியா பெற்றுள்ளது. இரண்டாண்டுகள் தலைமைப் பதவி வகிக்கும் இந்தியாவை தொடர்ந்து, இதன் தலைமைப் பதவியை இலங்கை ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.