ரோஷன் பாண்டே 
இந்தியா

ஞானவாபி மசூதிக்குப் பதில் கோயில்: ஸ்டிக்கர் ஒட்டியவர் மீது வழக்குப்பதிவு

மத நம்பிக்கைகளை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டதாக ஹிந்து சமாஜ் கட்சி செயலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

வாரணாசி: ஞானவாபி மசூதிக்கு வழிகாட்டும் அறிவிப்பு பலகையில் மசூதி என்கிற இடத்தை மறைத்து கோயில் என்கிற ஸ்டிக்கர் ஒட்டியவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

மத நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்பட்ட பிரிவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் ஹிந்து சமாஜ் கட்சியின் மாநில செயலர் ரோஷன் பாண்டே.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரக்யா பதாக், ஞானவாபி மசூதிக்கு வழிகாட்டும் அறிவிப்பு பலகையில் மசூதிக்கு பதிலாக கோயில் என்று அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டிய நபரின் விடியோ சில தினங்களுக்கு முன்பு வைரலானது.

அதிலுள்ள நபர் ரோஷன் பாண்டே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைத் தேடும் பணி தொடர்ந்து வருவதாகவும் பிரக்யா தெரிவித்தார்.

மத நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்படுதல், பொய்யான தகவலைப் பரப்புதல், மத நம்பிக்கையை உள்நோக்கோடு அவமதிக்க முயற்சித்தல் ஆகிய பிரிவின் கீழ் ரோஷன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

SCROLL FOR NEXT