இந்தியா

நாளை கோவா செல்கிறார் பிரதமர் மோடி: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!

DIN

பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

ஓஎன்ஜிசி  கடல் உயிர்வாழும் மையத்தைத் திறந்து வைக்கிறார். பின்னர் இந்திய எரிசக்தி வார நிகழ்ச்சியைத் தொடங்குகிறார். பின்னர் விக்சித் பாரத் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.  

கோவாவில் ரூ.1,330 கோடி மதிப்பிலான பொதுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார். கோவாவின் தேசிய தொழில்நுட்ப கழகத்தின் நிரந்தர வளாகத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார்.

தேசிய நீர் விளையாட்டுக் கழகத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், ரோஸ்கர் மேளாவின் கீழ் பல்வேறு துறைகளில் புதிதாக அரசு ஆள்சேர்ப்பு செய்யப்பட்ட 1930 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்க உள்ளார். 

மேலும், பல்வேறு நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாக பிரதமர் அலுவலகம் திங்கள்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT