இந்தியா

சஞ்சய் சிங் பதவியேற்புக்கு மாநிலங்களவைத் தலைவர் மறுப்பு!

DIN


மாநிலங்களவை உறுப்பினராக ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் பதவியேற்றுக் கொள்ள அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அனுமதி மறுத்துள்ளார்.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறையினா் கைது செய்து கடந்தாண்டு சிறையில் அடைத்தனா்.

கடந்த மாதத்துடன் சஞ்சய் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக் காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஆம் ஆத்மி தரப்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இடைக்கால ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் முறையிட்ட சஞ்சய் சிங்கின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், நீதிமன்றக் காவலிலேயே பிப்.5-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சஞ்சய் சிங் மீதான குற்றச்சாட்டு உரிமைக் குழுவில் விசாரணைக்கு உள்ளதால் பதவியேற்புக்கு அனுமதிக்க முடியாது என்று ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா ஆர்சிபி?

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

SCROLL FOR NEXT