இந்தியா

நாட்டின் முதல் கல்வெட்டியல் அருங்காட்சியகம்!

கல்வெட்டியலுக்கான சிறப்பு அருங்காட்சியகம் ஹைதராபாத்தில் அமையவுள்ளது.

DIN

ஹைதராபாத்: நாட்டின் முதல் கல்வெட்டியல் அருங்காட்சியகத்துக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, சாலார் ஜங் அருங்காட்சியகத்தில் இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

பாரத் பகிர்மான கல்வெட்டு களஞ்சியத் திட்டத்தை மத்திய அரசு 2023-ல் அறிவித்தது. இந்த திட்டத்தின்கீழ் டிஜிட்டல் முறையில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் மாற்றப்பட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இந்திய தொல்லியல்துறையால் நிர்வகிக்கப்படும் இந்த அருங்காட்சியகத்தில் கல்வெட்டுகளின் எழுத்து, உரை மற்றும் மொழி ஆகியவை பல்வகை ஊடகங்கள் மூலமாக காட்சிப்படுத்தப்படும்.

இது குறித்து கிஷன் ரெட்டி தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “நாட்டின் முதல் கல்வெட்டியல் அருங்காட்சியகம் ஹைதராபாத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது”

மேலும் அவர், “புதிய அருங்காட்சியகம் திறப்பதற்கான முதல் படி மட்டுமல்ல இது, நமது தேசத்தின் கதையைச் சொல்லும் கல்வெட்டுகளின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தையும் அவற்றை பாதுகாத்தல் மற்றும் காட்சிப்படுத்தல் ஆகியவை நோக்கிய முன்னேற்றத்திற்கான தொடக்கமும்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT