இந்தியா

இளைஞர்கள், சுய வேலைவாய்ப்பு உருவாக்க ரூ.1000 கோடி!

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

DIN

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கல்வி கற்ற மற்றும் திறன் வாய்ந்த இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பை உருவாக்கவும் குறு நிறுவனங்களை வளர்ச்சியடைய செய்யவும் முதல்வர் யுவா யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.1000 கோடி அரசு  ஒதுக்கவுள்ளதாக மாநில நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்த திட்டத்துக்கான ஒதுக்கீடு குறித்து நிதியமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

தனியார் துறையில் நிறுவனங்கள் அமைக்க 10 தொழில் பூங்காக்கள் மாநிலத்தில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொழில் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகள் 10 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் இதனால் பயனடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT