இந்தியா

மத்திய காவல் படையில் பணியாற்றும் பெண்கள்... : அமைச்சர் தகவல்

DIN

இந்தியா முழுவதும் மத்திய அரசின் காவல் படைகளான சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகியவற்றில் 41,606 பெண்கள் பணியாற்றுவதாக மக்களவையில் செவ்வாய்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், மத்திய ஆயுதப்படைக்கு அதிகளவில் பெண்களைப் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை ஆகியவற்றில் சேர்த்து பெண்கள் 41,606 பேர் பணியில் உள்ளனர்” என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலமாக அளிக்கப்பட்ட பதிலில் அவர் தெரிவித்தார்.

நித்யானந்த் ராய்

எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), தொழிற்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்), ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) உல்ளிட்ட மத்திய அரசின் காவல் படைகளில் ஒட்டுமொத்தமாக 10 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

பெண்களை அதிகளவில் பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் விரிவான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு, உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு ஆகியவற்றில் தளர்வு ஆகியவை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லையில் பரவலாக மழை

தாமிரபரணி இலக்கிய மாமன்றக் கூட்டம்

சிறப்பாக பணிபுரிந்த காவலா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

தச்சநல்லூா் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

லக்னௌவை வெளியேற்றியது டெல்லி

SCROLL FOR NEXT