ம.பி. பட்டாசு ஆலை விபத்தில் 11 ஆக உயர்ந்த பலி: நிவாரணம் அறிவிப்பு 
இந்தியா

ம.பி. பட்டாசு ஆலை விபத்தில் 11 ஆக உயர்ந்த பலி: நிவாரணம் அறிவிப்பு!

மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. 

DIN

மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. 

ம.பி.யின் ஹர்தா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 60 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

படுகாயமடைந்தவர்கள் போபால் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து அருகிலிருந்த குடியிருப்புகளுக்கும் பரவத் தொடங்கியதால் அங்குப் பதற்றம் நிலவி வருகின்றது. பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவை மத்தியப் பிரதேச அரசு நியமித்துள்ளது. 

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 

மேலும், மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படுவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT