காங்கிரஸ் 40 இடங்களில்கூட வெற்றி பெறாது: மாநிலங்களவையில் பிரதமர் பேச்சு!
குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்குப் பதிலளித்து மாநிலங்களவையில் பிரதமா் நரேந்திர மோடி பேசி வருகிறார்.
குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்குப் பதிலளித்து மாநிலங்களவையில் பிரதமா் நரேந்திர மோடி பேசி வருகிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையுடன் தொடங்கியது. நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் பிப். 1-ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்குப் பதிலளித்து மாநிலங்களவையில் பிரதமா் மோடி பேசி வருகிறார். அவர் பேசும்போது, "நாட்டை பிளவுபடுத்துவதில்தான் காங்கிரஸ் கவனம் செலுத்துகிறது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில்கூட வெற்றி பெறாது. கடந்த காலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்?. இப்போது எங்களுக்கு அறிவுரை வழங்குகிறீர்கள். நாட்டின் பாதுகாப்பை பற்றி பேசும் காங்கிரஸ், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தது.
இதையும் படிக்க: தில்லி மெட்ரோவில் குடியரசுத் தலைவர் பயணம்
பாஜக 400 இடங்களில் வெற்றி பெறுவதற்கு கார்கே எங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியுள்ளார்" எனத் தெரிவித்தார்.