அரவிந்த் கேஜரிவால் | கோப்பு 
இந்தியா

கேஜரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை அளித்த மனு மீது இன்று தீர்ப்பு!

கலால் கொள்ளை பணமோசடி வழக்கில் சம்மனை ஏற்காதது தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த புகாரின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது. 

DIN

கலால் கொள்ளை பணமோசடி வழக்கில் சம்மனை ஏற்காதது தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த புகாரின் மீதான தீர்ப்பை தில்லி நீதிமன்றம் இன்று(பிப்.7) மாலை 4 மணிக்கு அறிவிக்க உள்ளது. 

தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தில்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் தொடா்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு இதுவரை ஐந்து முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அந்த சம்மனை நிராகரித்த கேஜரிவால், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகக் குற்றம்சாட்டி நேரில் ஆஜராகவில்லை.

இந்த நிலையில், அமலாக்கத்துறை இயக்குநரகம் தில்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பிப். 3ல்  புகார் அளித்தது. இதையடுத்து இந்த வழக்கு பிப்.7-க்கு ஒத்திவைத்தது. அதன்படி இந்த வழக்கு மாலை 4 மணிக்கு உத்தரவுக்காக அனுப்ப உள்ளதாக கூடுதல் பெருநகர நீதிபதி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

சூடான உணவுப் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT