இந்தியா

தில்லி: மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதல்வர் போராட்டம்

DIN

புதுதில்லி: மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் தில்லியில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

கா்நாடகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் இழுத்தடிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு கா்நாடகத்துக்கு மத்திய அரசு இழைத்துள்ள அநீதியைக் கண்டித்தும் தில்லி ஜந்தர்மந்தரில் கர்நாடக அரசு இன்று போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், அரசியல் கட்சிகளை கடந்து கர்நாடக நலனுக்கான போராட்டத்தில் பங்கேற்க கர்நாடகத்தை சேர்ந்த பாஜகவின் எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார். கர்நாடக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் போராட்டத்துக்கு அழைத்திருந்தனர். 

இதற்கிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு, மத்திய நிதியை தவறாக பயன்படுத்தும் காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக எம்பிக்கள் போட்டி போராட்டம் நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையை கைது செய்ய உத்தரவு? ஆளுநர் மாளிகை விளக்கம்

4-ம் கட்ட தேர்தல்: 3 மணி நிலவரம்!

நிஜாமாபாத்திலும் ஹிஜாப்பை அகற்றக் கோரி பாஜக வேட்பாளர் பிரச்னை!

ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!

SCROLL FOR NEXT