முகப்பு
இந்தியா

மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி உரை!

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்குப் பதிலளித்து பிரதமா் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் உரையாற்றவுள்ளார்.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:42 PM
பகிர்:

புதுதில்லி: குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்குப் பதிலளித்து பிரதமா் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் உரையாற்றவுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த 31-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையுடன் தொடங்கியது. நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப். 1-ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்குப் பதிலளித்து பிரதமா் மோடி மாநிலங்களவையில் இன்று பிற்பகலுக்கு மேல் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திங்கள்கிழமை மக்களவையில் உரையாற்றிய மோடி, மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் துணிச்சலை எதிா்க்கட்சிகள் இழந்துவிட்டதாக கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →