முகப்பு
இந்தியா

வடமேற்கு பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 4 காவலர்கள் பலி!

பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின்மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 4 காவலர்கள் கொல்லப்பட்டனர். 

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 4:57 PM
வடமேற்கு பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 4 காவலர்கள் பலி
பகிர்:

ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின்மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 4 காவலர்கள் கொல்லப்பட்டனர். 

காவல்துறையின் கூற்றுப்படி, வாகனம் தேரா இஸ்மாயில் கானில் உள்ள கலாச்சி காவல் நிலையத்தின் எல்லையில் நிறுத்தப்பட்டது. கிரஹா அஸ்லாம் வாக்குச் சாவடியின் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். 

பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த இரட்டை பயங்கரவாத தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும், தனிநபரும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் அப்பகுதி தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் முன்னாள் கோட்டையாகும்.

அண்மை ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து இந்தக் குழு பல தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →