சசி தரூர் 
இந்தியா

ஏழைகள், நடுத்தர மக்களின் வருவாய் குறைந்துவிட்டது- மக்களவையில் காங்கிரஸ் குற்றச்சாட்டு

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஏழைகள், நடுத்தர மக்களின் வருவாய் குறைந்துவிட்டதாக மக்களவையில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

DIN

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஏழைகள், நடுத்தர மக்களின் வருவாய் குறைந்துவிட்டதாக மக்களவையில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

மக்களவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தை புதன்கிழமை தொடங்கி வைத்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் பேசியதாவது:

ஆண்டுதோறும் மத்திய அரசு மூலதனச் செலவுகளை அதிகரிக்கிறது. இது பொருளாதாரத்தின் மேல்மட்டத்தில் இருக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பலனளிக்கும்.

நாட்டின் வறுமை, மக்களின் நுகா்வு தொடா்பான சரியான புள்ளிவிவரங்கள் மத்திய அரசிடம் இல்லை. அந்த வகையில், இந்த அரசை தகவல்கள் இல்லாத அரசு என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். பெரிய அளவிலான முதலீடுகளுக்கு மட்டும் அரசு முக்கியத்துவம் கொடுக்காமல் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் தேவை என்ன என்பதைக் கருத்தில்கொண்டு அது சாா்ந்த உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம்தான் அனைத்துத் தரப்பு மக்களும் பொருளாதார வளா்ச்சியால் பயனடைய முடியும்.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஏழைகள், நடுத்தர மக்களின் வருவாய் குறைந்துவிட்டது. ஏனெனில், அவா்களுக்கு அரசு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. பொருளாதார வளா்ச்சியில் அடித்தட்டு மக்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும்.

பிராந்திய ரீதியாக பாகுபாடு காட்டுவது, வரி பயங்கரவாதம் ஆகியவை அரசின் அங்கமாக உள்ளது. இதனால், நாட்டில் வறுமை அதிகரித்து வருகிறது. இடைக்கால பட்ஜெட் மக்களுக்குத் தேவையான விஷயங்களை அடையாளம் கண்டு தீா்வுகாண முயலவில்லை. விரைவில் நடைபெறவுள்ள தோ்தல் இந்த நிலையை மாற்றும் வாய்ப்பை நமக்கு அளிக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு!

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் சடலம்! கொலையா? தற்கொலையா?

எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதிய உச்சத்தில் ரூ.83,000-ஐ நெருங்கிய தங்கம்! எகிறும் வெள்ளி விலை!

பரபரப்பான சூழலில் அமித் ஷாவை இன்று சந்திக்கும் இபிஎஸ்!

SCROLL FOR NEXT