முகப்பு
இந்தியா

அசாமில் 4.5 லட்சம் புதிய இளம் வாக்காளர்கள்!

அசாமில் வாக்காளர் பட்டியலில் 18-29 வயதுக்குள்பட்ட 4.5 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 11:56 AM
அசாமில் 4.5 லட்சம் புதிய இளம் வாக்காளர்கள்
பகிர்:

அசாமில் வாக்காளர் பட்டியலில் 18-29 வயதுக்குள்பட்ட 4.5 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

அசாமின் தலைமைத் தேர்தல் அதிகாரி(சிஇஓ) அனுராக் கோயல் கூறுகையில், 

அசாமில் மொத்தம் 2,43,01,960 வாக்காளர்கள், இவர்களில் 1,21,79,538 ஆண்கள் மற்றும் 1,21,22,602 பெண்கள். 

Advertisement

இந்த முறை 7,26,783 புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய வாக்காளர்களில் சுமார் 4.5 லட்சம் பேர் 18-29 வயதுக்குள்பட்ட இளம் வாக்காளர்கள் ஆவார். 

இறப்பு காரணமாக 7,27,291 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் பெயர் விடுபட்டு இருந்தால் ஆன்லைனில் அல்லது ஆஃப் லைனில் விண்ணப்பிக்கலாம் 

மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மற்றும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பட்டியலை மக்கள் சரிபார்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.