இந்தியா

மக்களவைத் தேர்தல்: 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்

வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

DIN

வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. வரும் தோ்தலில் நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 1.5 கோடி தோ்தல் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். 

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்  91.20 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா்.

இந்த எண்ணிக்கை 6% அதிகரித்து வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், நாடு முழுவதும் 2.53 கோடி புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர். 

மேலும் ஆண் வாக்காளர்கள் 49.72 கோடியும், பெண் வாக்காளர்கள் 47.15 கோடியும், மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்ச ம் பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044  பேரும் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT