ஓய்வறியா உழைப்புக்குத் தகுந்த அங்கீகாரம்: மோடிக்கு நன்றி தெரிவித்த ஆய்வு நிறுவனம்
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் அதன் நிறுவனருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ளது.
பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவித்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளது எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்.
இது குறித்து ஆராய்ச்சி நிறுவனம் எக்ஸ் வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“மிக பொருத்தமுடைய அங்கீகாரமாக எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது அறிவிக்கப்பட்டதுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. நமக்கான உணவு, ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வறியா உழைப்பை அளித்தவருக்கான சிறந்த அங்கீகாரம் இது” எனத் தெரிவித்துள்ளது.
பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கடந்தாண்டு காலமான நிலையில், அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.