முன்னாள் எம்எல்ஏ ரோசன் லால் வர்மாவுக்கு | X 
இந்தியா

முன்னாள் எம்.எல்.ஏவுக்குக் கொலை மிரட்டல்!

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ-வுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் விடப்படுவதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

DIN

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ரோசன் லால் வர்மாவுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் விடப்படுவதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தன்னிடமும் தன் மகளிடமும் தகாத முறையில் பேசியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து வர்மா கூறுவதாவது, 'எனக்கு பல்வேறு தொலைபேசி எண்களிலிருந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கிறது. என்ன கூறினாலும் தொடர்ந்து என்னைத் தகாத வார்த்தைகளால் துன்புறுத்தினர்.'

மேலும், இந்த துன்புறுத்தலாம் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். 10 வெவ்வேறு எண்களிலிருந்து அழைப்புகள் வந்திருப்பதாகவும் அந்த எண்களை அவர் குறித்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த புகாரை காவல் கண்காளிப்பாளர் அசோக் குமார் மீனாவிடம் அளித்துள்ளதாக அவர் கூறினார். அதன் பிறகு சனிக்கிழமை காலை இரண்டு எண்களில் இருந்து அழைப்புகள் வந்ததாகவும், அந்த அழைப்பை எடுத்துப் பேசிய தன் மகளிடம் தகாத முறையில் பேசியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  

இந்த விசாரணை சைபர் செல்லுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தீவிரமாக நடந்துவருவதாக காவல்கண்காணிப்பாளர் மீனா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT