இந்தியா

மத்தியப் பிரதேசம்: பெண்களுக்கான உதவி தொகை 9-வது தவணை விடுவிப்பு

DIN

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் புதன்கிழமை மாநிலத்தில் மகளிருக்கான உதவித் தொகை பெறும் 1.29 கோடி பயனாளிகளுக்கு ரூ.1,576 கோடிக்கான உதவித் தொகையை விடுவித்தார்.

மேலும் பழங்குடி மக்கள் வாழும் பகுதியான மண்ட்லாவில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி அமைக்கவிருக்கும் அரசின் திட்டத்தை அறிவித்தார்.

மகளிருக்கான உதவி தொகை மாதம் ரூ.1,250/- அளிக்கும் மாநில அரசின் திட்டத்தில் இது 9-வது தவணை. 

முன்னாள் பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான் தொடங்கி வைத்த திட்டம் நவம்பர் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு பெரும் கை கொடுத்தது. மீண்டும் அமைந்த பாஜக ஆட்சியில் அந்த திட்டம் தொடர்கிறது.

இந்த நிலையில் ரூ.1,576 கோடி மட்டுமில்லாமல் ரூ.340 கோடி ஓய்வூதிய பயனாளிகள் 56 லட்சம் பேரின் கணக்குகளில் வரவு வைக்க விடுவித்தார்.

மேலும், ஆயுர்வேத கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டினார். ரூ.134.53 கோடி திட்ட மதிப்பில் இந்தக் கல்லூரி அமையவுள்ளது. 

இது தவிர, ரூ.14.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT