முகப்பு
இந்தியா

மக்களவைத் தேர்தலில் 370 இடங்களுக்கு மேல் பாஜக வெல்லும்: பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலில் 370 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

Updated On : 12 பிப்ரவரி, 2024 at 4:27 AM
பகிர்:

மக்களவைத் தேர்தலில் 370 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் பழங்குடியின சமூகத்தினரின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த தேர்தலை விட ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூடுதலாக 370 வாக்குகள் பெற்று, பாஜக 370 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும் கூறுகிறார்கள். பாஜகவின் தாமரை சின்னம் 370-ஐ தாண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

மக்களவைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்வதற்காக ஜபுவாவிற்கு வரவில்லை. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க ஒரு தொண்டனாக வந்துள்ளேன். எங்கள் இரட்டை எஞ்சின் அரசாங்கம் மத்தியப் பிரதேசத்தில் இரட்டிப்பு வேகத்தில் செயல்படுகிறது.

ஏழைகள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினரை நீண்ட காலமாக காங்கிரஸ் புறக்கணிக்கின்றது. காங்கிரஸுக்கு தேர்தல் நேரத்தில்தான் கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் நினைவுக்கு வருகிறது.

தங்களின் உடனடி தோல்வியை உணர்ந்து, காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடைசி தந்திரத்தை கடைபிடிக்கின்றன. கொள்ளையடித்து, பிளவுபடுத்துவதே காங்கிரஸின் குறிக்கோள் என்று அவர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →