இந்தியா

எல்லைப் பகுதியில் டிரோன்: ராணுவம் துப்பாக்கிச் சூடு

DIN

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்ட எல்லை பகுதியில் வானில் பறந்த பாகிஸ்தான் டிரோன் நோக்கி இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வானில் டிரோன் நடமாட்டத்தைக் கவனித்த ராணுவத்தினர், டிரோனை நோக்கி மூன்று முறை சுட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பிறகு டிரோன் மீண்டும் பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பியது. நர் மன்கோடெ பகுதியில் பறந்த டிரோனை கீழே கொண்டுவரும் நோக்கில் டிரோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்த பகுதியில் ராணுவம் தேடுதலில் ஈடுபட்டு வருகிறது. டிரோன் மூலமாக வெடிபொருள்கள், போதை பொருள்கள் ஆகியவை சட்டதிற்கு புறம்பாக கடத்தப்படுவதைத் தடுக்க எல்லை பகுதியில் டிரோன் நடமாட்டம் தென்பட்டால் தகவல் அளிப்பதற்கு சன்மானம் ரூ.3 லட்சம் என ஜம்மு காஷ்மீர் காவலர்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி பள்ளி மாணவி முதலிடம்!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவக்கம்?

மொழியால் அல்ல, வேறு சில காரணங்களால் தெலுங்கில் நடிக்க சிரமம்: சம்யுக்தா மேனன் அதிரடி!

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் அதிரடி சோதனை!

தாமதமாகும் வாக்குப்பதிவு விவரங்கள்: உச்ச நீதிமன்றத்தில் மனு

SCROLL FOR NEXT