இந்தியா

அயோத்தியில் குவியும் பக்தர்கள் கூட்டம்!

DIN

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பால ராமரை தரிசிக்க ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மூலவர் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஜன.22-ம் தேதி நடைபெற்றது. இந்த கோலாகல நிகழ்ச்சியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.

பால ராமரை தரிசிக்க அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் அயோத்தியில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையான இன்று(13.02.24) அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீராமபிரானை தரிசிக்க ஏராளமானோர் குவிந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பக்தர்கள் ஒருவர் கூறுகையில், நாங்கள் அகமதாபாத்திலிருந்து வந்திருக்கிறோம். அற்புதமான காட்சி. 500 ஆண்டுகளுக்குப் பிறகு, சனாதன வெற்றியின் அடையாளமாக, நிமிர்ந்து நிற்கும், இவ்வளவு அற்புதமான கோயில் கட்டப்பட்டதை நினைத்து என் கண்களில் கண்ணீர் வழிகிறது. ராமர் கோயில் கட்டப்பட்டது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று அகமதாபாத்திலிருந்து வந்த பக்தர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT