அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் பிரமுகர்கள் | ANI
இந்தியா

பாஜகவில் இணையும் தலைவர்கள்: காங்கிரஸ் அவசர ஆலோசனை!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அசோக் சவாண் அறிவித்திருந்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இன்று (பிப். 13) இணைந்தார்.

DIN

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோன் சவாண் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இன்று (பிப். 13) இணைந்துள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மும்பையில் நடைபெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தியின் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இன்று இணைந்தார் அசோக் சவாண். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அசோக் சவான் நேற்று அறிவித்திருந்த நிலையில், பாஜக தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இன்று (பிப். 13) இணைந்தார்.

முன்னதாக கட்சியில் இணைவதற்காக பாஜகவின் மும்பை தலைமை அலுவலகத்திற்கு வந்த அசோக் சவாணுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT