ராகுல் காந்தி 
இந்தியா

‘தேர்தல் பத்திரம் என்பது லஞ்சம்’: அன்றே சொன்ன ராகுல்!

தேர்தல் நிதிப் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டபோது அதனை விமர்சித்து ராகுல் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

Ravivarma.s

தேர்தல் நிதி பத்திர திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோது அதனை விமர்சித்து ராகுல் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

அரசியல் கட்சிகளுக்கு தனி நபர் அல்லது நிறுவனங்கள், ரொக்கமாக அல்லது காசோலையாக நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நிதிப் பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-இல் அமல்படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை பாஜக பெற்றது.

தேர்தல் பத்திர திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “தேர்தல் நிதிப் பத்திரம் என்பது சட்டவிரோதமானது, உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் நிதிப் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தேர்தல் பத்திரம் குறித்து எக்ஸ் தளத்தில் 2019-ஆம் ஆண்டு ராகுல் காந்தி வெளியிட்ட பதிவு:

“புதிய இந்தியாவில், லஞ்சம் மற்றும் சட்டவிரோத கமிஷன் தேர்தல் பத்திரம் என்று அழைக்கப்படுகின்றது.” எனத் தெரிவித்திருந்தார்.

தற்போது ராகுல் காந்தியின் கருத்தை மேற்கோள்காட்டி, அன்று ராகுல் காந்தி கூறியது இன்று நிரூபணம் ஆனது என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT