இந்தியா

திரிபுரா அமைச்சரவை விரைவில் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும்: முதல்வர்

DIN

திரிபுராவிலிருந்து அயோத்தி செல்லும் சிறப்பு ரயிலை முதல்வர் புதன்கிழமை இரவு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அயோத்திக்கு சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

அகர்தலா ரயில் நிலையத்திலிருந்து அயோத்தி செல்லும் சிறப்பு ரயிலைக் கொடியசைத்துத் துவக்கிவைத்த பிறகு, திரிபுராவிலிருந்து 400க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

முதல்வர் கூறுகையில், பிப்ரவரி 5ஆம் தேதி திரிபுரா அமைச்சரவை அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அதிக கூட்டம் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.

முழு திரிபுரா அமைச்சரவையும் விரைவில் அயோத்திக்குச் சென்று ராமரை தரிசனம் செய்வார்கள் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

SCROLL FOR NEXT