இந்தியா

மேக்கேதாட்டு அணை விரைவில் கட்டப்படும்: கர்நாடக முதல்வர் உறுதி!

காவிரி ஆற்றின் குறுக்கே விரைவில் மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

DIN

காவிரி ஆற்றின் குறுக்கே விரைவில் மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வரும், நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது பேசிய சித்தராமையா, “மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ளது. முறையான அனுமதி பெற்று விரைவில் அணை கட்டும் பணி தொடங்கப்படும்.

மேக்கேதாட்டு அணை கட்ட உருவாக்கப்பட்ட சிறப்பு குழுக்களின் கீழ் 2 துணைக் குழுக்கள் செயல்படும். அணை கட்டும்போது நீர் செல்லும் நிலப்பரப்புகள், வெட்டப்பட வேண்டிய மரங்கள் ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த கர்நாடக பட்ஜெட் தொடரிலேயே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

மீண்டும் கர்நாடக சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணை விவகாரம் எழுப்பப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திரன் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதி மொழி ஏற்பு

கல்லூரியில் கருத்தரங்கம்

தமிழ் வளரச் செய்தவா் தம்பிரான் சுவாமிகள்

‘சுயமரியாதையுடன் வாழ கல்வியே துணை நிற்கும்’

SCROLL FOR NEXT