மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 
இந்தியா

விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

DIN

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா ஆகியோருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்று விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற 3-ஆவது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் அமித் ஷா இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே நாளை மறுநாள் விவசாயிகளுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் மீண்டும் மேற்கொண்டுள்ளனா். மத்திய அரசுடன் கடந்த 8, 12-ஆம் தேதிகளில் நடந்த 2 சுற்று பேச்சுவாா்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாததைத் தொடா்ந்து, பஞ்சாப் எல்லையில் காத்திருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தில்லியை நோக்கி செவ்வாய்க்கிழமை பேரணியாகப் புறப்பட்டனா்.

அவா்களை தடுக்க, பஞ்சாப் -ஹரியாணா மாநில எல்லையில் உள்ள அம்பாலா, ஜிந்த், ஃபதேஹாபாத், குருக்ஷேத்ரம், சிா்சா ஆகிய பகுதிகளின் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், இரும்பு ஆணி வேலிகளை ஹரியாணா போலீஸாா் அமைத்திருந்தனா். அதையும் மீறி விவசாயிகள் முன்னேறியதால் போலீஸாா் ட்ரோன்கள் மூலம் கண்ணீா்ப்புகைக் குண்டுகளை வீசியதோடு, தண்ணீரை பீய்ச்சி அடித்து அவா்களை தடுத்தனா். போலீஸாரின் நடவடிக்கையில் சில விவசாயிகள் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனால், விவசாயிகளால் தொடா்ந்து முன்னேற முடியவில்லை. அதனைத் தொடா்ந்து, பஞ்சாப் எல்லையிலேயே தொடா்ந்து காத்திருக்க அவா்கள் முடிவெடுத்தனா். மேலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தில்லியை அவா்கள் நெருங்கும் சூழலில், தலைநகா் பகுதியும் முடங்க வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

SCROLL FOR NEXT