அகிலேஷ் யாதவ் 
இந்தியா

11 வேட்பாளர்களின் பெயரை அறிவித்தது சமாஜவாதி!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளர்களின் பெயரை சமாஜவாதி கட்சி அறிவித்துள்ளது.

DIN

மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளர்களின் பெயரை சமாஜவாதி கட்சி அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் கீழ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து சமாஜவாதி கட்சி போட்டியிடவுள்ளது. காங்கிரஸ் உடனான மக்களவைத் தொகுதிகள் இறுதி செய்யப்படாத நிலையில், 11 கட்சி வேட்பாளர்களின் பெயர்களை சமாஜவாதி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சமாஜவாதி கட்சி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் (எக்ஸ்) பதிவில் 11 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. தற்போது ரேபரேலியில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்து அமேதி தொகுதியில் ராகுலின் நடைப்பயணம் நடைபெறவுள்ளது.

இந்த நடைப்பயணத்தில் சமாஜவாதியின் கட்சித் தலைவரும் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எனினும், மக்களவைத் தொகுதி வரையறை இறுதி செய்யப்படும் வரை காங்கிரஸ் நடைப்பயணத்தில் பங்கேற்கப்போவதில்லை என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். தொகுதிகள் முடிவு செய்யப்பட்டதும் நடைப்பயணத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: தில்லி சிபிஜ அலுவலகத்தில் ஜன.19-ல் விஜய் ஆரராக சம்மன்!

ஜன நாயகன் தணிக்கைச் சான்று! பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!

ஓய்வை அறிவித்தார் ஆஸி. கேப்டன் அலீசா ஹீலி.. 8 உலகக் கோப்பைகளை வென்றவர்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்

தில்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்!

SCROLL FOR NEXT