எங்களுக்கு நீதி வேண்டும்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
மக்களவையில் நீதிகோரி முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
மக்களவையில் முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையில் இன்று பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும், எங்களுக்கு நீதி வேண்டும் என்ற முழக்கத்துடன் அவையைவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
Advertisement
Advertisement
மக்களவையில் பட்ஜெட் விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பங்கேற்ற நிலையில், இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவார் என்று கூறப்படுகிறது.
மேலும், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் குறித்த அறிவிப்பு, பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டத்தில் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் அறைக்குள் சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்வகையில் பேசியதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
Opposition members shout slogans, walk out of Lok Sabha
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.