உத்தரப் பிரதேசம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
கடந்த 2018-ஆம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, அப்போது பாஜக தலைவராக இருந்த அமித் ஷாவை, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, 2018ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சுல்தான்பூர் நீதிமன்றத்தில் இன்று காலை நேரில் ஆஜரான ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
குஜராத் உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தபோது, 2005-இல் நிகழ்ந்த போலி என்கவுன்ட்டரில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டது. பின், மும்பை சிபிஐ நீதிமன்றம் அமித் ஷாவை வழக்கிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.