தில்லி முதல்வருக்கு மீண்டும் புதிய சம்மன்
தில்லி முதல்வருக்கு மீண்டும் புதிய சம்மன் 
இந்தியா

தில்லி முதல்வருக்கு மீண்டும் புதிய சம்மன்!

DIN

கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் பிப்ரவரி 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பாக அமலாக்க இயக்குநரகம் கேஜரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவா் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வந்தார். இதையடுத்து, அமலாக்க இயக்குநரகம் நகர நீதிமன்றத்தை அணுகியது. சனிக்கிழமையன்று மத்திய ஏஜென்சி தாக்கல் செய்த புகாா் தொடா்பாக கேஜரிவாலுக்கு தனிப்பட்ட முறையில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து நீதிமன்றம் விலக்கு அளித்தது.

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி மாா்ச் முதல் வாரம் வரை நடைபெறும் என்று கேஜரிவால் தரப்பு வழக்குரைஞர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 16- ஆம் தேதி அடுத்த விசாரணை தேதியில் அவா் உடல் ரீதியாக நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏழாவது முறையாக சம்மன் அனுப்பி, பிப்.26-ல் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. இதுவரை அனுப்பிய சம்மன்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை என கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் முன்னிலை

உ.பி.யில் 'இந்தியா' கூட்டணி முன்னிலை

ஆந்திரப் பேரவைத் தேர்தல்: தெலுங்கு தேசம் முன்னிலை

தமிழக பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் தொடர் பின்னடைவு!

SCROLL FOR NEXT