நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் 
இந்தியா

இந்தியாவே வியக்கும்... ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல்!

சினிமா, விளையாட்டு, பொருளாதாரம், மருத்துவம், அரசியல் என பல துறைகளிலிருந்து பிரபலங்களுக்கு அழைப்பு.

DIN

முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவே வியக்கும் வண்ணம் திருமணத்தை நடத்தும் நோக்கத்தில், நிகழச்சியில் பங்கேற்க சினிமா, விளையாட்டு, பொருளாதாரம், மருத்துவம், அரசியல் என பல்வேறு துறைகளிலிருந்து முக்கியப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, நீடா அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் இந்தியத் தொழிலதிபரான வீரேன் மெர்ச்சென்டின் மகளான ராதிகா மெர்ச்சென்டிற்கும் ஜுலை 12ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட்

இந்தத் திருமணத்தில் பங்கேற்க செளதி அராம்கோ தலைவர் யாசர் அல் ருமாயன், என்வி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனர் விவி நெவோ, முன்னாள் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் டீன் நிதின் நோஹ்ரியா, சிசிஆர்எம் நியூயார்க் நிறுவன பங்குதாரர் டாக்டர். பிரையன் லெவின், சோனி தலைமை நிர்வாக இயக்குநர் கெனிச்சிரோ யோஷிடா, முபதாலா தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கல்டூன் அல் முபாரக், எச்.எஸ்.பி.சி. குழுமத்தின் தலைவர் மார்க் டக்கர், புரூக்ஃபீல்ட் நிர்வாக பங்குதாரர் அனுஜ் ரஞ்சன், ஜெனரல் அட்லாண்டிக் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பில் ஃபோர்டு,

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் செயல் தலைவர் ஜே லீ, கோ-ட்ரீ கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவனர் ஹோவர்ட் மார்க்ஸ், உள்ளிட்ட பலர் ஆனந்த் அம்பானியின் திருமணக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சினிமா மற்றும் விளையாட்டுத் துறையிலும் பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சினிமாவில்... அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தினர், அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய், ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர், ஷாருக்கான் மற்றும் குடும்பத்தினர், அமீர் கான் மற்றும் குடும்பத்தினர், சல்மான் கான், அக்‌ஷய் குமார் டிவிங்கிள் கன்னா, அஜய் தேவ்கன் - கஜோல், சாயிஃப் அலிகான் குடும்பத்தினர், ரன்வீர் சிங் - தீபிகா படுகோன், ரன்பிர் கபூர் - ஆலியா பட், விக்கி கெளஷால் - கத்ரீனா கைஃப், மாதுரி தீக்‌ஷித், ஆதித்யா - ராணி கபூர், போனி கபூர் குடும்பத்தினர், கரன் ஜோஹர், வருண் தவாண், ஷ்ரத்தா கபூர், கரீஷ்மா கபூர்.

விளையாட்டுத் துறையில்... சச்சின் மற்றும் குடும்பத்தினர், எம்.எஸ். தோனி மற்றும் குடும்பத்தினர், ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஹார்திக் பாண்டியா - குர்ணால் பாண்டியா, இஷான் கிஷன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, கைவினைஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இன்று 17 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

உயிரி எரிபொருளால் என்ஜின் பாதிப்பா? மத்திய அமைச்சா் திட்டவட்ட மறுப்பு

காகித, அட்டை இறக்குமதி 8% அதிகரிப்பு

எம் & எம் வாகன விற்பனை சரிவு

SCROLL FOR NEXT