விண்வெளி வீரர்களை பாராட்டிய பிரதமர் மோடி
விண்வெளி வீரர்களை பாராட்டிய பிரதமர் மோடி DOTCOM
இந்தியா

இவர்கள்தான் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள்!

DIN

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்துக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக கேரளத்துக்கு இன்று காலை பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தில், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ரூ.1,800 கோடி மதிப்பிலான 3 முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகளுடன் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வின்போது, ககன்யான் திட்டத்தில் இஸ்ரோவால் விண்வெளிக்கு முதல்முறையாக அனுப்பப்படும் 4 வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

விண்வெளிக்கு செல்லும் வீரர்கள்

குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய நான்கு பேரையும் பிரதமர் மோடி வாழ்த்தினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், “விண்வெளிக்கு செல்லும் வீரர்களை சந்தித்து நாட்டுக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டு மக்களின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள்.” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT