இந்தியா

மைனஸ் 25 டிகிரி செல்சியஸில் நடந்த திருமணம்! வரலாற்றில் முதல்முறை!!

DIN

ஹிமாசலப் பிரதேசத்தின் கடும் குளிர் நிறைந்த பள்ளத்தாக்கில் குஜராத்தை சேர்ந்த காதலர்கள் இருவர் திருமணம் செய்துகொண்டனர்.

மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிரிலும் அலங்கார மேடை அமைத்து ஹிந்து முறைப்படி காதலர்கள் திருமணம் செய்துகொண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஹிமாசலப் பிரதேசத்தின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அஜய் பன்யால், கடும் குளிரில் நடைபெற்ற திருமணத்தின் விடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கடும் குளிரில் அமைக்கப்பட்ட மணமேடை

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இதுபோன்றும் திருமணம் நடைபெறும். காதலர்களின் ஆசை நிறைவேறிய தருணம். காதலியின் விடாமுயற்சியால், குஜராத்தைச் சேர்ந்த காதலர்கள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் மைனஸ் 25 டிகிரி வெப்பநிலையிலும் திருமணம் செய்துகொண்டனர்.

கடும் குளிருக்கு மத்தியில் வாகனத்தில் வந்திறங்கிய மணமகள்

இங்கு இதுபோன்று திருமணம் நடப்பது இதுவே முதல்முறை. ஸ்பிட்டி மாவட்டத்தின் மூராங் பகுதியில் இன்று காலை இந்த அற்புதமான திருமணம் நடைபெற்றது. நெடுந்தூரம் பணித்து தனித்துவமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற இடமாக ஸ்பிட்டி மாறியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: நாமக்கலில் 93.51% தேர்ச்சி!

செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் கனமழை!

சுவாரஸ்யமான கதை! ஆனால்.. ரசவாதி - திரை விமர்சனம்!

சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம்: விராட் கோலி!

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிவகங்கை 97.02% தேர்ச்சி பெற்று 2-ம் இடம்!

SCROLL FOR NEXT