இந்தியா

ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் சாதனை!

DIN

குஜராத்தில் ஒரே நேரத்தில் சுமார் 4 ஆயிரம் பேர் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் புத்தகத்தில் சாதனை படைத்துள்ளனர். 

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குஜராத்தின் மோதராவில் இன்று காலை 51 வெவ்வேறு ஊர்களில், 108 இடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்துள்ளனர். 
 
மோதரா சூரியன் கோயிலில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்வில், பல குடும்பங்கள், மாணவர்கள், யோகா ஆர்வலர்கள், மூத்த குடிமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் உற்சாகமாகப் பங்கேற்றனர். 

முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் மொதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

இதுகுறித்து உலக சாதனையின் நடுவர் ஸ்வப்னில் தங்காரிகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கான சாதனையை சரிபார்க்க வந்துள்ளேன். இதற்கு முன்பு யாரும் இந்த சாதனையை முறியடிக்க முயன்றதில்லை. இது புதிதாக இருந்தது. 

குஜராத் உள்துறை அமைச்சர் சங்கவி கூறுகையில், குஜராத் நாட்டிலேயே முதல் உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது. இதை தெரிவிப்பதில் பெருமையுடன் உணர்கிறேன். உலகம் முழுவதும் யோகா ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT