இந்தியா

புத்தாண்டு: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

DIN

மகரவிளக்கு பூஜைக்காக 2 நாள்களுக்கு முன்னதாக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, நிர்மால்ய பூஜையுடன், 18,018 தேங்காய்களில் நெய் அபிஷேகம் செய்யப்பட்டது.  
தலைமை அர்ச்சகர் பி.என்.மகேஷ் நம்பூதிரி தலைமையில், தந்திரி (தலைமை அர்ச்சகர்) கண்டரரு மகேஷ் மோகனரரு மேற்பார்வையில் நெய்யபிஷேகம் நடைபெற்றது.

புத்தாண்டையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று காலை முதல் ஏராளமானோர் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால்,டிஐஜி தாம்சன் ஜோஸ், சன்னிதானம் சிறப்பு அதிகாரி ஆர் ஆனந்த் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை சனிக்கிழமை மாலை திறக்கப்பட்டது. ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு விழாவை முன்னிட்டு ஜனவரி 13, 14ல் பல்வேறு சடங்குகள் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) தெரிவித்துள்ளது. 

மகரவிளக்கு நாளில் சன்னிதானத்தில் (கோயில் வளாகம்) திருவாபரணம் (புனித ஆபரணங்கள்) மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட தீபாராதனை ஆகியவற்றை பக்தர்கள் தரிசிப்பார்கள்.

மகரவிளக்கு தரிசனத்துக்குப் பிறகு, ஜனவரி 20 ரை மலைக் கோயில் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT