அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் அறிக்கையில் வெளியான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (ஜன. 3) தீர்ப்பளிக்கிறது.
அதானி குழுமம் மீதான புகார் குறித்த விசாரணையை கண்காணிக்கக் கோரும் வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
படிக்க | திருநங்கை என்பதால் ஆசிரியர் பணி மறுப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அதானி குழுமத்தின் மீது பங்குச் சந்தை மோசடி, பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.