இந்தியா

முஸ்லிம் இளைஞர்களைத் தூண்டி விடாதீர்கள்: ஒவைசிக்கு விஎச்பி தலைவர் எச்சரிக்கை!

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அஸாதுதீன் ஒவைசிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DIN

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அஸாதுதீன் ஒவைசிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாவ்நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அஸாதுதீன் ஒவைசி, “இளைஞர்களே, நாம் நமது மசூதியை இழந்துவிட்டோம். தற்போது அங்கு என்ன நடந்துவருகிறது என்று நீங்கள் பார்த்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இதனால் மனவேதனை ஏற்படவில்லையா” என்று பேசினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்திர ஜெயின், “ராம ஜன்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் சுரேந்திர ஜெயின் தொடர்ச்சியாக விமர்சித்து வருவது நீதிமன்ற அவமதிப்பு எல்லைக்குள் வரும் விஷயமாகும். 

முஸ்லிம் சமூகத்தினரை மீண்டும் தூண்டி விடாதீர்கள் என்று ஒவைசி போன்ற தலைவர்களை எச்சரிக்க விரும்புகிறேன். வளர்ச்சிக்கு மாறாக தவறான பாதையில் முஸ்லிம் சமூகத்தினரை அவர்கள் தள்ளிவிடுகிறார்கள். 

ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்டு நிறைவடையும் தருணத்தில் உள்ளது ஒவைசி போன்ற தலைவர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் ராமர் கோயிலை வரவேற்க தயாராகி கொண்டிருப்பது அவர்களுக்கு மேலும் ஏமாற்றத்தை அதிகரித்து வருகிறது. அதன் வெளிப்பாடாகவே ஒவைசி போன்ற தலைவர்கள் இவ்வாறு பேசி வருகின்றனர்.” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT